சென்னை திருவொற்றியூரில் உள்ள தங்கமாளிகையில், வடசென்னை தமிழ்ச்சங்கம் சார்பாக வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலின் ஒன்பதாம் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Vairamuthu book release fuction நிகழ்ச்சியில் முதலில் பேசத்துவங்கிய திமுக பொருளாளர் துரைமுருகன் ”தமிழன் தாழ்ந்து போய் நிற்க மாட்டான், வடசென்னைதான் தமிழைக் காப்பதில் தீவிரமாக இருக்கிறது” என்று வடசென்னையின் பெருமைகள் பற்றி பேசினார்.
அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ”தமிழ் மொழி என்பது அதிகாரம் என்றுதான் நான் கருதுகிறேன், தமிழ் மொழி வாயிலாகதான் நீங்கள் உங்கள் உரிமைகளைப் பெற முடியும். வைரமுத்துவின் வருகையால் வடசென்னை பெருமை கொள்கிறது என்று மேடையில் கூறுகிறார்கள், அப்படியில்லை சென்னைக்கு வந்ததால்தான் வைரமுத்துவிற்கு பெருமை. என் தமிழ் எங்கு சேரவேண்டும் என்று நான் கருதினேனோ, அங்கேயே அந்த உழைக்கும் மக்களின் முன் என் தமிழைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று நான் பெருமை கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:
7 மாவட்டங்களில் இன்று கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!