சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேச்சு: மேலும், “பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்ககூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கிற பட்சத்தில் மாணவர்கள் ஆர்வமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவார்கள்” எனத் தெரிவித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளின் காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பொன்முடி இது குறித்து அவர், மாணவர்கள் தொழிற்கல்வி படிக்கக் கூடிய வகையிலும் நிலையிலும் அவர்கள் சுயதொழிலை மேற்கொள்ள கூடிய வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
வேலைவாய்ப்பு: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தொழில் துறையினர், தொழில் படிப்புகள் படிக்க கூடிய மாணவர்கள் என மூன்று தரப்பினரும் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் 2 ஷிப்ட் அடிப்படையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அத்தகைய வகுப்புகளை காலை மாணவிகளுக்கும் பிற்பகலில் மாணவர்களுக்கும் நடத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : கற்றது கையளவு : 82 வயதில் 25ஆவது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்!