தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள்களை கண்டறிய மோப்ப நாய்கள்

சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள் உள்பட தடை செய்யப்பட்ட பொருள்களை கண்டறிய முதல் முறையாக இரண்டு மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

two sniffing dogs at chennai airport
மோப்ப நாய்கள்

By

Published : Dec 30, 2021, 8:21 AM IST

சென்னை: விமான நிலைய சுங்கத்துறை ஆணையம் முலமாக விமான நிலையம் மற்றும் சரக்ககப் பிரிவுகளில் வெளிநாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயணிகள் சுங்க விதிகளுக்குட்பட்டு பொருள்களை எடுத்து வருகின்றனர்.

இதனால் சுங்க வரி செலுத்தி தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருள்கள் கொண்டு வரப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பணியில் சுங்கத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்ட விரோதமாக கடத்தி வரும் பாெருள்களை பறிமுதல் செய்து, அவற்றுக்கு சுங்க வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவு

இந்நிலையில் போதைப் பொருள்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவு என புதிதாக ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவற்றை ஒப்படைக்கும் விழா சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நடந்தது.

இவ்விழாவில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் உதய் பாஸ்கர் தலைமை தாங்கினார். மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களை சுங்கத்துறை அலுவலர்களிடம் தமிழகம், புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. மற்றும் சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ். சவுத்ரி ஒப்படைத்தார்.

பஞ்சாப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற நாய்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் இருந்து இந்த மோப்ப நாய்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஓரியோ மற்றும் ஆர்லி ஆகிய மோப்ப நாய்கள் போதை பொருள்களை எப்படி கண்டு பிடிக்கும் என்பதை செய்து காட்டின. சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்ககப் பகுதிகளில், இந்த நாய்கள் தினமும் சுற்றி வரும்.

விழாவில் தலைமை ஆணையர் சவுத்ரி பேசுகையில், ”குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையில், நாய்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடத்தல்களை தடுக்கவும் மனிதர்களை பாதுகாக்கவும் இவற்றின் பங்கு முக்குயமானது.

இந்நிலையில் 1984ஆம் ஆண்டு சுங்கத்துறையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சுங்கத்துறையில் மீண்டும் மோப்ப நாய்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

நுண்ணறிவுப் பிரிவில் முன்னேற்றம்

மேலும், விமானத்தில் கடத்தி வரப்படும் போதைப் பொருள்களை கண்டுபிடிப்பதில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இதன் வாயிலாக விமான நிலைய சுங்கத் துறையின் நுண்ணறிவுப் பிரிவு சிறந்த ஒன்றாக மாற உள்ளது” எனக் கூறினார்.

விழாவில் சென்னை விமான நிலைய முதன்மை ஆணையர் உதய பாஸ்கர், விமான நிலைய இயக்குநர் சரத்குமார், மத்திய தொழிற்படை டி.ஐ.ஜி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தீவிர குற்றங்களை தடுக்க சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம்

ABOUT THE AUTHOR

...view details