தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 AM
11 AM

By

Published : Apr 18, 2021, 11:18 AM IST

1. 30 டன் ஆக்சிஜன் அனுப்பிவைத்து துயரின்போது தோள்கொடுத்த ரிலையன்ஸ்!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 30 டன் திரவ ஆக்சிஜனை அனுப்பிவைத்தது. பேரிடரின்போது கை கொடுத்து உதவிய அந்நிறுவனத்திற்கு அம்மாநில அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

2. சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: சுவாமி, அம்மன் எழுந்தருளல்

மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.

3.'சிலரே இறப்பிற்குப் பின்னும் இருப்பர்' - விவேக் உதிர்த்த சொல் இன்று அவருக்கே...!

சென்னை: மூத்த அரசியல்வாதி தா. பாண்டியன் மறைவுக்கு விவேக் எழுதிய அஞ்சலி வார்த்தைகளை, இன்று அவருக்கே பொருத்தி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

4. ஜேஇஇ நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு!

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது.

5.நாட்டில் ஒரே நாளில் 2.61 லட்சம் கரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத வகையில் நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6. வடமாநில இளைஞர் உள்பட இருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

சென்னை: திருவிக நகரில் காவல் துறையினரின் விசாரணைக்குப் பயந்து வடமாநில இளைஞர், அவரது உறவின இளம்பெண் ஒருவருடன் இணைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

7. 'என்னுடன் நடிக்க வேண்டும் என விவேக்குக்கு ஆசை' - கமல்

'என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் மிகவும் ஆசைப்பட்டார். அதனாலேயே இந்தியன் 2 படத்தில் இருவரும் இணைந்தோம்' என்று நடிகர் விவேக்குடன் தனக்கிருந்த நட்பு குறித்து மநீம தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பகிர்ந்துகொண்டார்.

8. 'விவேக் என்னிடம் காட்டிய அன்பும், மரியாதையும்' - இளையராஜா உருக்கம்

விவேக் என்னிடம் காட்டிய அன்பையும், மரியாதையையும் இன்னொரு ரசிகரிடம் நான் பார்க்க முடியுமா என எனக்குத் தெரியவில்லை என்று நடிகர் விவேக்கின் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாகப் பேசி காணொலி வெளியிட்டுள்ளார்.

9. ஜனங்களின் கலைஞனுக்கு மயிலை மக்களின் பசுமை அஞ்சலி

சூழலியல் செயற்பாட்டாளர் நடிகர் விவேக்கின் மரணத்துக்கு மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, அங்கிருந்து ஊர்வலமாக நடந்துசென்று பேருந்து நிலையம் வாசலில் விவேக் உருவப்படத்துக்கு சமூக நலச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

10. 'லேன்டரோவரில் ஊர்வலம்' - இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்

இளவரசர் பிலிப்பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புனித ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details