தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM

By

Published : Sep 3, 2020, 9:18 PM IST

இந்தியா- சீன எல்லையில் பதற்றம் - குவிக்கப்படும் வீரர்கள்

டெல்லி : இந்தியா - சீனா எல்லைப் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தோ - திபெத்திய எல்லைக் காவலர்களும் (ஐ.டி.பி.பி) , எஸ்.எஸ்.பி (சாஷஸ்த்ரா சீமா பால் ) வீரர்களும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

6 லட்சம் ஏ.கே - 47 203 ரகத் துப்பாக்கிகள் இந்தியாவில் உற்பத்தி - ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தம்

ஏ.கே-47 203 ரகத் துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, ரஷ்யாவுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எல்லைப் பதற்றத்துக்கு சீனாவே பொறுப்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்பும் நிலையில், எல்லையில் தொடர் அத்துமீறலை சீனா மேற்கொண்டு வருவதாக வெளிறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

வராக்கடன் தொர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின்னர் அடுத்த இரு மாதங்களுக்கு புதிய வாராக்கடன் கணக்குகளை அறிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையிலிருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டம்- தென்னக ரயில்வே

சென்னை: சென்னையில் இருந்து கோவை, மதுரை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆறு கூடுதல் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மண்ணடி தொழிலதிபர் கடத்தல் வழக்கு : தவ்பிக்கின் கூட்டாளி கைது!

சென்னை : செம்மரக்கட்டை கடத்தல் பிரச்னையில் கடத்தப்பட்ட மண்ணடி தொழிலதிபர் வழக்கில் தொடர்புடைய தவ்பிக்கின் முக்கிய கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காலக்கெடுவை இறுதி செய்ய வேண்டாம் !

சென்னை : மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் ஆணையிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது - கங்கனா ரணாவத்

மும்பை இப்போது தனக்கு 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

’இந்தியா தங்கம் வென்றதில் எனக்கும் பங்கு இருப்பது மகிழ்ச்சி’ - செஸ் வீரர் பிரக்ஞானந்தா

சென்னை: முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதில் தனக்கும் பங்கு இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக செஸ் வீரர் பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் வேலைவாய்ப்பின்மை

ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கும் வேலையின்மை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details