சென்னை:தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 549 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 60 ஆயிரத்து 11 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 542 நபர்களுக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 5 நபர்களுக்கும், டெல்லி மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 549 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சத்து 82 ஆயிரத்து 351 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 415 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 5, 314 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 713 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 811 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் என மேலும் 9 இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,29,537
கோயம்புத்தூர் - 53,804
செங்கல்பட்டு - 51024
திருவள்ளூர் - 43312
சேலம் - 32221
காஞ்சிபுரம் - 29101
கடலூர் - 24,865
மதுரை - 20849
வேலூர் - 20608
திருவண்ணாமலை - 19311
தேனி - 17032
தஞ்சாவூர் - 17582
திருப்பூர் - 17607
விருதுநகர் - 16522
கன்னியாகுமரி - 16685
தூத்துக்குடி - 16221
ராணிப்பேட்டை - 16057
திருநெல்வேலி - 15507
விழுப்புரம் - 15126
திருச்சிராப்பள்ளி - 14539
ஈரோடு - 14,142
புதுக்கோட்டை - 11516
கள்ளக்குறிச்சி - 10861
திருவாரூர் - 11101
நாமக்கல் - 11501
திண்டுக்கல் - 11,144
தென்காசி - 8363
நாகப்பட்டினம் - 8349
நீலகிரி - 8129
கிருஷ்ணகிரி - 8018
திருப்பத்தூர் - 7543
சிவகங்கை - 6620
ராமநாதபுரம் - 6393
தருமபுரி - 6543
கரூர் - 5356
அரியலூர் - 4666
பெரம்பலூர் - 2260
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1032
ரயில் மூலம் வந்தவர்கள் 428