கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 2020ஆம் கல்வியாண்டுக்கான டி.என்.பி.எஸ்.சியின் கால அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை அந்த தேர்வுகள் நடைபெறாத சூழலில் அவை எப்போது நடத்தப்படவுள்ளதென தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதில், “2019-2020ஆம் ஆண்டில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குரூப் - 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும். குரூப் - 4 வி.ஏ.ஓ தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமும், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற மே மாதமும், குரூப் 3 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி! இதனடிப்படையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை www.tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் அடுத்த ஆண்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு காலி பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளது. முன்னதாக, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்த தேர்வுகளில் சில மாற்றங்கள் வரும் என்றும், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாது என்றும் அண்மையில் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களை திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்