தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 28, 2021, 4:38 PM IST

ETV Bharat / city

‘முகாமிற்கு அனுப்பினால் யானைக்கும் கரோனா இல்லை எனச் சான்றிதழ் வேண்டும்’ - தமிழ்நாடு அரசு

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சான்றிதழ் பெற்ற பிறகே முகாமுக்கு யானைகளை அனுப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

‘முகாமிற்கு அனுப்பினால் யானைக்கும் கரோனா இல்லை என சான்றிதழ் வேணும்’ -தமிழ்நாடு அரசு
கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சான்றிதழ் பெற்ற பிறகே முகாமுக்கு யானைகளை அனுப்ப வேண்டும்- தமிழக அரசு

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர், அனைத்து இந்து சமய இணை ஆணையர்கள், அனைத்து உதவி ஆணையர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், “யானைகளுடன் அனுப்பப்பட உள்ள பணியாளர்கள் 24 மணி நேரத்திற்கு முன் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் முகாமில் உள்ள யானைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாள்கள் நடத்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள்

  1. யானைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என மருத்துவரிடமிருந்து கரோனா எதிர்மறைச் சான்றிதழ் 'பெற்றே யானைகளை முகாமிற்கு அனுப்ப வேண்டும்.
    இந்து அறநிலை துறை ஆணையர் பிரபாகர் அனுப்பியுள்ள சுற்றரிக்கை
  2. யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்படவுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் 24 மணி நேரத்திற்கு முன் கரோனா பரிசோதனை செய்து, கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகே பணியாளர்களை யானைகளுடன் முகாமிற்கு அனுப்ப வேண்டும்.
  3. யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.
  4. யானைகளுடன் முகாமிற்குச் செல்லும் யானைப்பாகன்கள், மருத்துவர்கள், வாகன ஓட்டுநர்கள், இதர பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சீரான இடைவெளிகளில் கிருமிநாசினிகளை உபயோகித்தல் போன்ற கரோனா தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
    இந்து அறநிலை துறை ஆணையர் பிரபாகர் அனுப்பியுள்ள சுற்றரிக்கை
  5. யானைகளை முகாமிற்காக வாகனங்களில் ஏற்றுவதற்கு முன்பு வாகனங்களை கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்தம்செய்ய வேண்டும்.

மேலும், நோயுற்ற, வருடாந்திர பருவக்கோளாறு உள்ள, தொற்றுநோய் பாதிப்புள்ள, நோய் வர வாய்ப்புள்ள, முகாமிற்கு வரமறுக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்துவர வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

யானைகளுக்கு மேற்காணும் அறிவுரைகள், வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்து உறுதிப்படுத்திய பின்பே திருக்கோயிலிருந்து யானைகள், உடன் வரும் பணியாளர்களை முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...உயர் கல்வித்துறையின் கீழ் ராஜா முத்தையா கல்லூரி

ABOUT THE AUTHOR

...view details