தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2019, 9:02 PM IST

Updated : Oct 2, 2019, 9:53 PM IST

ETV Bharat / city

பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் - கண்காட்சியில் பங்கேற்ற முதலமைச்சர்!

காஞ்சிபுரம்: பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் கண்காட்சியில் முதலமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Edapadi


பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11ஆம் தேதி, மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

மாமல்லபுரத்தை பசுமை நகரமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாமல்லபுரம் சென்றார். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் என்ற நோக்கத்தில், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட கண்காட்சியில் கலந்துகொண்டார்.

மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அப்போது, பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் படைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், பிளாஸ்டிக்கை (நெகிழி) தவிர்த்து மாற்று பொருட்கள் வழங்கி சிறப்பித்தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நடந்த இந்த கண்காட்சியில், மண்பானை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Oct 2, 2019, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details