தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 6:54 PM IST

ETV Bharat / city

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி இடமாற்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணையை மேற்பார்வை செய்து வந்த ஐஜி பவானீஸ்வரி, வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ips transfer
ips transfer

சென்னை: தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மீதான சொத்துக்குவிப்பு, ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் செயல்பட்டு வருகிறது. ஐஜி மேற்பார்வையில் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐஜியாக பவானீஸ்வரி செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் பவானீஸ்வரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் ஐஜியாக நியமித்து, உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பவானீஸ்வரி மேற்பார்வையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் விசாரணை நடந்து வந்தது. அதேபோல காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருந்து வந்த நிஷா பார்த்திபன், மத்திய உளவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details