தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2022, 10:01 AM IST

ETV Bharat / city

தமிழ்நாட்டில் உள்ள 114க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கலாம் - இந்து சமய அறநிலையத் துறை

தமிழ்நாட்டில் உள்ள 114க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 114க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கலாம் - இந்து சமய அறநிலையத் துறை
தமிழ்நாட்டில் உள்ள 114க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கலாம் - இந்து சமய அறநிலையத் துறை

சென்னை: புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் தலைமையில் மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நேற்று(மார்ச் 30) நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும், அதன்படி அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயில், அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் (ம) குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு தில்லை விநாயகர் திருக்கோயில், உள்பட 114க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்திருக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் : அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை'

ABOUT THE AUTHOR

...view details