தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2022, 1:21 PM IST

ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம் - தனியரசு

ஒற்றை தலைமை அஸ்திரத்தை எடுத்து கட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம்
எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம்

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று(ஜூன்.18) தொடர்ந்து 4-ஆவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஓபிஎஸ்-சை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததாகவும், இந்த முறை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம்

சுயநலம் கருதாமல் கட்சியின் நலம் கருதியவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியையும் ஆட்சியையும் நம்பி ஒப்படைத்த சசிகலாவை அலட்சியப்படுத்தி அபகரித்து கொள்ள சதி செய்தது போல தற்போது சூழ்ச்சி செய்து அதிமுகவின் முழு அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி முயற்சி செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவுமில்லை. தொண்டர்கள் ஆதரவும் இல்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை வந்தாலும் ஓ.பன்னீர் செல்வம் தான் தலைமை ஏற்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்றால் சசிகலாவும் ஆதரவு தெரிவிப்பார். அதிமுகவை வலிமைப்படுத்தும் விதமாக சசிகலா மற்றும் டிடிவி.தினகரனையும் சந்தித்து பேச உள்ளேன்" என கூறினார்.

இதையும் படிங்க:'பாஜக தலைவர் அண்ணாமலை என்றுமே செல்லாக்காசு' - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details