சென்னை:மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று(ஜனவரி.29) தமிழ்நாடு வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
30.01.2022:தென் தமிழ்நாடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.