தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’நிலுவைத்தொகை தராவிட்டால் மாணவர் சேர்க்கை கிடையாது’ - தனியார் பள்ளிகள் சங்கம்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்ததற்கான பணத்தைத் தராவிட்டால் மாணவர் சேர்க்கை நடத்த மாட்டோம் எனத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

private
private

By

Published : Feb 26, 2020, 4:36 PM IST

இது குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியபோது, ”இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்துவருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்த்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிக் கல்வித் துறை இன்னும் தராமல் உள்ளது. கட்டணத்தொகை கிடைக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் சிரமம் உள்ளது.

தமிழ்நாடு அரசு இதற்காக இந்தாண்டு 310 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை இரண்டு ஆண்டிற்கான கட்டணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

’பணம் தராவிட்டால் மாணவர் சேர்க்கை கிடையாது’ - தனியார் பள்ளிகள் சங்கம்

மேலும், வரும் கல்வியாண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளிகளிலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களை சேர்க்க வேண்டும் என அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.

மாணவர்களைச் சேர்ப்பதற்கான அரசாணையை வெளியிட்டு, அதற்கான நிதியையும் அளித்தால் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க முடியும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்கள் எல்லோரும் போலீஸ் தான் - கூடுதல் கமிஷனர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details