துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, பெரியார் குறித்த சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில அமைப்புகள் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டும், காவல் நிலையங்களில் ரஜினிகாந்தின் மீது புகாரளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடந்த திராவிடர் கழகப் பேரணி குறித்து ஆங்கிலப் பத்திரிகையில் வந்த சில தாள்களை ஆதாரமெனக் காண்பித்தார். மேலும், இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பெரியார் குறித்த ரஜினிகாந்தின் சர்ச்சை கருத்து குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டியளித்தார். அதில், ' ரஜினிகாந்த் இல்லாத விஷயத்தை சொல்லிவிட்டு, துக்ளக் பத்திரிகையில் வந்ததாகக் கூறி, அதற்கான ஆதாரத்தை வேறு ஒரு பத்திரிகையின் மூலம் இதுதான் ஆதாரம் என்று கூறுகிறார். ஏன் துக்ளக்கில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் காண்பிக்க வேண்டியது தானே.
உண்மைக்கு மாறாக ரஜினிகாந்த் பேசியது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். எனவே, அவர் தனது பேச்சுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கூறினார்.
’ரஜினி துக்ளக்கில் வந்த கட்டுரையை ஆதாரமாகக் காண்பிக்க வேண்டியது தானே’ இதையும் படிங்க: ’ஒரு படமும் ஓடாது, நடவடிக்கைகள் முடக்கப்படும்’ - ரஜினியை எச்சரிக்கும்...!