சென்னை:(Doctor MGR University convocation) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் 12ஆயிரத்து 814 பேருக்கு மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பட்டங்களையும், சான்றிதழ்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க இருக்கின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளத் தகவலில்,' தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நாளை (20.12.2021) காலை 11 மணியளவில் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடைபெறுகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்கள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர்கள்
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழாப்பேருரை ஆற்றுகிறார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பட்டம் பெறுபவர்களின் விவரம்
இவ்வாண்டு மருத்துவத்தில்(Medical) 5,589 நபர்களுக்கும், பல் மருத்துவத்தில் (Dental) 1,621 நபர்களுக்கும், இந்திய மருத்துவத்தில் (Indian Medicine) 381 நபர்களுக்கும், மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள் (Allied Health Sciences) 2,077 நபர்களுக்கும், செவிலியர் படிப்பில் (Nursing) 671 நபர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் Occupational Therapy மருத்துவத்தில் 126 நபர்களுக்கும், மருந்தியியல்(Pharmacy)1,435 நபர்களுக்கும்,இயன்முறை மருத்துவத்தில் (Physiotherapy) 914 நபர்களுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 814 நபர்களுக்குப் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படயிருக்கிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் 25 நபர்களுக்கு முனைவர் பட்டங்கள் (பிஹெச்டி), உட்பட 104 நபர்களுக்கு தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட மொத்தம் 129 நபர்களுக்கு விழா மேடையிலேயே பட்டங்களை நேரடியாக வழங்குகிறார். மீதமுள்ள நபர்களுக்கு கல்லூரிகள் மூலம் வழங்கப்படும்.
பெண்களே அதிகம்