இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த, 3,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித்தொகை வழங்குவதற்காக, மூன்று கோடியே முப்பத்தாறு லட்சத்து இருபத்து ஆறாயிரம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொண்டு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்களுக்கு அளித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.