தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1,547 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

சென்னை: வழக்கறிஞருக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பார்கவுன்சில்

By

Published : Oct 10, 2019, 12:02 AM IST

உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களில் வாதிட முடியும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பார்கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் அகில இந்திய பார்கவுன்சில் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை 2010ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

சட்டப்படிப்பை முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் குறித்த கால அவகாசத்திற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தவிர்க்கத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதிற்கான சான்றிதழ்களை பார்கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஐந்து வழக்கறிஞர்கள் பணி செய்யத் தடை: இது பார் கவுன்சில் பஞ்சாயத்து!

ABOUT THE AUTHOR

...view details