தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடி செவ்வாய் சிறப்பு

ஆடி மாதம் சிறப்பான மாதமாகும். அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை என்றாலே அம்பிகைக்கும், முருகக்கடவுளுக்கும் உகந்த நாளாகும். அதன் சிறப்பை பார்ப்போம்.

ஆடி செவ்வாய் சிறப்பு
ஆடி செவ்வாய் சிறப்பு

By

Published : Jul 20, 2021, 9:15 AM IST

செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமாளுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

ஆடி செவ்வாய்

அதிலும் ஆடி செவ்வாய் என்றால் அம்பாளுக்கும், முருகனுக்கும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு விளக்கேற்றி, மலர்கள் சாத்தி, முருகனுக்கே உகந்த கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

கந்தனையும், அம்பாளையும் ஆடி செவ்வாயான இன்று (ஜூலை 20) தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.

முன்னோர்களின் ஐதீகம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அம்பிகை துர்க்கைக்கும், முருகனுக்கும் விரதம் இருந்து வழிபட்டால் தோஷம் நீங்கி வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் ஏற்படும். இந்த விரதத்தால் திருமணத்தடை, குழந்தையின்மை போன்றவை விலகும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம்.

அதேபோல் ஆடி செவ்வாய் கிழமையில் கன்னிப் பெண்கள் ஔவையார் நோன்பிருந்தால் அவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: 'கோமியத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் விடுதலை'

ABOUT THE AUTHOR

...view details