தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழைக்கு ஒதுங்கியது குத்தமா? கத்திகுத்து வாங்கிய ஸ்விகி ஊழியர்

சென்னை: காசிமேட்டில் ஸ்விகி ஊழியரைக் கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

லோகேஷ்

By

Published : Jul 23, 2019, 4:17 PM IST

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னை காசிமேடு பகுதியிலுள்ள கொடிமரத்து சாலையில் உள்ள தனியார் நகைக் கடை அருகே ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பாயாக பணிபுரியும் துளசிராம் மழைக்காக ஒதுங்கினார்.

அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டுபேர் துளசிராமனை கத்தியால் தலையில் குத்திவிட்டு கையில் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்ற அவர்கள் அங்கிருந்து ஒரு இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரைப் பார்த்ததும் இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க முயன்றபோது கத்தியைக் காட்டி காவல் துறையினரையும் மிரட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட லோகேஷ், அவர் வைத்திருந்த ஆயூதம்

அப்போது ஒருவர் தப்பியோட மற்றொருவரைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்கின்ற பல்லு லோகேஷ் என்பது தெரியவந்தது. மது போதையில் ரவுடி கண்ணன் என்பவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் அதற்காகத்தான் கத்தியுடன் சுற்றித் திரிந்தாகவும் காவல் துறையினரிடம் அவர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details