தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அனுமதியின்றி நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' - உயர் நீதிமன்றம்

சென்னை: சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் வரை விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழித் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

stay
stay

By

Published : Jan 8, 2020, 10:20 PM IST

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழித் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றை மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், 25 கிராம நிலங்களை கையகப்படுத்தத் தடை கேட்டும் உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, நில உரிமையாளர்கள் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.

ஏற்கெனவே இருக்கும் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல், புதிதாக இந்தத் திட்டம் கொண்டு வருவதால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ், முறையான அனுமதி பெறும் வரை, திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தக் கூடாது என நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த அரசாணையையும் ரத்து செய்யவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், முறையான அனுமதி பெறும் பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தெளிவுபடுத்தினர்.

இந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும், தலா 10 மரச்செடிகள் என்கிற விகிதத்தில் நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கக் குழு ஒன்றை அமைக்கவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தருமபுரி ஆட்சியருக்கு நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details