தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குற்ற வழக்கில் தொடர்புடையை 6 வழக்கறிஞர்களுக்குத் தடை!

கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 6 வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Six advocates suspended for alleging murder and swindling cases bar council
Six advocates suspended for alleging murder and swindling cases, bar council

By

Published : Oct 21, 2021, 3:39 PM IST

சென்னை: கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர் ராஜ், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராகக் கூடாது எனத் தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் உள்துறை கூடுதல் செயலாளர் அளித்தப் புகாரின் அடிப்படையில், வழக்கறிஞராகவும் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலி முத்திரைத் தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூர் வழக்கறிஞர் ராஜேந்திரன், போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கோயம்புத்தூர் வழக்கறிஞர் அசோக், நடத்துநராகப் பணியாற்றியதை மறைத்து சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பதிவு செய்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோருக்கும் தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மங்கிகேப் கொள்ளையன் கைது

ABOUT THE AUTHOR

...view details