தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தனியார் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு இலவச சிகிச்சை வழங்குக' - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்து, கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By

Published : May 19, 2021, 5:29 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஐ.நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன.

மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரெம்டெசிவிர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை ஏற்பாடுகள்: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details