சென்னை:கடந்த 08.10.2021 அன்று கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 01.11.2021அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையா சொத்துக்களுக்குப் பசலி ஆண்டு முறையில் வாடகை / குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 01.07.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.06.2022 அன்று முடிவடைகிறது. இந்த பசலியில் துறையில் நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 60 இலட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாட்டில் மண்டல வாரியாக,
- இணை ஆணையர் சென்னை (1) ரூ. 14.99 கோடியும்,
- இணை ஆணையர் சென்னை (2) ரூ.13.53 கோடியும்,
- இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 7.42 கோடியும்,
- இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 6.96 கோடியும்,
- இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 5.58 கோடியும்,
- இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ. 5.23 கோடியும்,
- இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ. 5.12 கோடியும்,
- இணை ஆணையர் மதுரை ரூ. 4.9 கோடியும்,
- இணை ஆணையர் திருநெல்வேலி ரூ. 4.3 கோடியும்,
- இணை ஆணையர் வேலூர் ரூ. 4.37 கோடியும்,
- இணை ஆணையர் சேலம் ரூ. 3.94 கோடியும்,
- இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.3.89 கோடியும்,
- இணை ஆணையர் கடலூர் ரூ. 3.84 கோடியும்,
- இணை ஆணையர் கோயம்புத்தூர் ரூ. 3.68 கோடியும்,
- இணை ஆணையர் ஈரோடு ரூ. 3.45 கோடியும்,
- இணை ஆணையர் தஞ்சாவூர் ரூ. 2.32 கோடியும்,
- இணை ஆணையர் திருவண்ணாமலை ரூ. 2.05 கோடியும்,
- இணை ஆணையர் விழுப்புரம் ரூ. 1.19 கோடியும்,
- இணை ஆணையர் சிவகங்கை ரூ. 1.9 கோடியும்,
- இணை ஆணையர் திருப்பூர் ரூ. 1.5 கோடி என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.