தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் தொகுப்பில் குடும்பத்தலைவிக்கு ரூ.1,000?

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் அறிவிப்பு பொங்கலில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடும்ப அட்டை
குடும்ப அட்டை

By

Published : Nov 17, 2021, 5:04 PM IST

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் திமுகவிற்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிய அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது" எனத் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகியும் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கான 20 உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(நவ.17) வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மக்கள் மத்தியில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் அறிவிப்பு பொங்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்றும் அல்லது 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:Pongal 2022 : தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details