மாநில போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை பல்லவன் சாலை போக்குவரத்துத் துறை தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,
- 2015 நவம்பர் முதல் உயர்ந்துள்ள பஞ்சப்படி 119 சதவிகிதம் முதல் 164 வரை உடனே கொடுக்க வேண்டும்.
- இவற்றின் 50 மாத நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- 2016 செப்டம்பர் முதல், 2017 டிசம்பர் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கிராஜுவிடி, கனுட்டேசன், விடுப்பு சம்பள நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.
- 2019 ஏப்ரல் முதல் இன்று வரை ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுகால நிலுவை, பி.எஃப். உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும்.