சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டுள்ள தகவலில், "உலக ஆஸ்துமா தினத்தையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் 4 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆஸ்துமா நோயினால், உலகம் முழுதும், 30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 1,000 பேர் உயிரிழப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்துமா நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அழற்சி, ஒவ்வாமையே முக்கிய காரணமாக உள்ளது. ஆஸ்துமா மற்றும் அழற்சி ஆகியவை மாறி, மாறி ஒன்றை ஒன்று சார்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. அவற்றை புரிந்து கொண்டாலே ஆஸ்துமா நோயை எளிதாக கையாள முடியும்.