தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாடகை பிரச்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல் - வாடகை தருவதில் பிரச்னை

சென்னை: வாடகை தருவதில் ஏற்பட்ட பிரச்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடகை பிரச்சினையில்  சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல்
வாடகை பிரச்சினையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல்

By

Published : Oct 8, 2020, 1:26 PM IST

சென்னை ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது. வாடகை இடத்தில் ஷா நவாஸ் என்பவர் அந்த சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத 50 பேர் திடீரென சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடகை பிரச்சினையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல்

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது சூப்பர் மார்க்கெட் ஊழியர் குதுப் என்பவரை தாக்கியதால் பயந்து போன மற்ற ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்து காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான ஆயிரம் விளக்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்டதும் சிலர் தப்பி ஓடினர். சிக்கிய 10 பேரை பிடித்து விசாரித்ததில் வாடகை பிரச்னையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்து றையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details