புரசைவாக்கத்தில் உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பைச் சேர்ந்த 8 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அக்குடியிருப்பில் ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள காவலர்களின் குடும்பத்தினருக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்களை அவர் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய சைலேந்திர பாபு, “ கரோனா தொற்றைக் கண்டு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்.
ரயில்வே காவல்துறையில் இதுவரை 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் தற்போது குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோல் தீயணைப்பு துறையில் 31 பேருக்கு கரோனா ஏற்பட்டு தற்போது 11 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் “ என அறிவுறுத்தினார்.
கரோனா தொற்றைக் கண்டு பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். இதையும் படிங்க: சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்!