தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Prohibition on conducting live classes: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை

Prohibition on conducting live classes: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jan 2, 2022, 5:12 PM IST

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை

Prohibition on conducting live classes:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதால், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தன.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 100 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும்

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜனவரி 10ஆம் தேதி வரையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தத் தடைவிதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் ஜனவரி 10ஆம் தேதி வரையில் நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மழலையர், விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்பட அனுமதி இல்லை.

9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்பிற்கு 20 மாணவர்களை மட்டும் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

'இல்லம் தேடி கல்வித் திட்டம்' வழக்கம்போல் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பள்ளி நேரத்தின் போது, ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி சார்பாகப் பயிற்சி மற்றும் தன்னார்வலர்களை தேர்வுசெய்தல் ஆகியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொடைக்கானலில் திடீர் காட்டாற்று வெள்ளம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details