தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Dec 18, 2020, 8:58 PM IST

Updated : Dec 18, 2020, 9:38 PM IST

20:28 December 18

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அப்போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, தடையைமீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி.(திமுக)., டி.ஆர். பாலு எம்.பி.(திமுக)., தயாநிதி மாறன் எம்.பி.(திமுக)., ஆ.ராசா எம்.பி.(திமுக)., திருச்சி. சிவா எம்.பி.(திமுக)., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி,(திமுக)., சேகர்பாபு எம்.எல்.ஏ.(திமுக)., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ(திமுக).,அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.(திமுக)., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.(திமுக)., கே.என். நேரு (திமுக)., வைகோ எம்.பி.(மதிமுக)., திருநாவுக்கரசு எம்.பி.(காங்கிரஸ்)., கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்)., பிரின்ஸ் எம்.எல்.ஏ (காங்கிரஸ்)., விஜயதாரணி எம்.எல்.ஏ (காங்கிரஸ்)., ரவி பச்சமுத்து எம்.பி (ஐஜேகே)., திருமாவளவன் எம்.பி., (விசிக)., செல்வராஜ் எம்.பி.(சிபிஐ)., பி.ஆர். நடராஜன் எம்.பி.(சி.பி.எம்)., பாலகிருஷ்ணன் (சிபிஎம்)., முத்தரசன் (சிபிஐ)., சுப்பராயன் எம்.பி (சிபிஐ)., எர்ணாவூர் நாராயணன்., சுபவீரபாண்டியன் (திராவிடர் கழகம்)., ஜவஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)., கீ.வீரமணி (திராவிடர் விடுதலைக் கழகம்), இனிகோ இருதயராஜ் (கிறிஸ்துவ அமைப்பு)., எஸ்ரா.சற்குணம் (இந்திய சமூக நீதி இயக்கம்)., மல்லை சத்யா (மதிமுக)., வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி)., செல்வபெருமாள் (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி) உட்பட போராட்டத்தில் பங்கேற்ற மொத்தம் 1600 நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு!

Last Updated : Dec 18, 2020, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details