குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக இரண்டு நாட்கள் புதுச்சேரி செல்கிறார். புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் சென்னை வருகை - ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு! - குடியரசுத் தலைவர்
சென்னை: சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
president
பின்னர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லி மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்!