பெருங்களத்தூரில் இன்று இரணியம்மன் கோவிலில் வேல் வைத்து பாஜகவினர் 10க்கும் மேற்பட்டோர் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கையில் வேலை எடுத்துக் கொண்டு அவர்கள் செங்கல்பட்டு நோக்கி செல்ல முயன்றனர்.
தடையை மீறி வேல் யாத்திரை - திருப்பி அனுப்பிய காவல்துறை!
சென்னை: தடையை மீறி வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.
cadres
ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரணியம்மன் கோயில் முன்பாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. 45 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதையும் படிங்க: வேல் யாத்திரை - திருத்தணி புறப்பட்டார் முருகன்!
Last Updated : Nov 6, 2020, 12:19 PM IST