தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2020, 6:44 PM IST

ETV Bharat / city

'உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50% ஒதுக்கீடு அரசாணை வரவேற்கத்தக்கது'

சென்னை: உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

pmk ramadoss
pmk ramadoss

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.

பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே உயர்சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'இடஒதுக்கீடு சட்டத்தின் வெற்றியில் யாருக்கும் பங்கு கிடையாது' - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details