திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அம்மனுவில், அ.தி.மு.க. பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறந்த பின்பு சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்பு பொதுக்குழுவை கூட்டி, பொதுச்செயலாளர் பதவியை நீக்கி கட்சி விதிகளுக்கு புறம்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். இந்நிலையில், கட்சியின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் சமீபத்தில் காலமானார்.
இந்த பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்ய, ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். கட்சி விதிமுறைப்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின்பு பொதுக்குழுவை கூட்டி உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.