தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலோடு வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
பெரியகுளம் வேட்பாளர் மாற்றம்! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
சென்னை: பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றப்பட்டு, மயில்வேல் என்பவரை அதிமுக தலைமைக் கழகம் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதற்காக பெரியகுளம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இவர் சென்னையில் குடியிருப்பதாகவும், இவருக்கும் தொகுதிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில், அவரை எப்படி வேட்பாளராக நிறுத்தலாம்? என தேனி அரசியலில் பூசல் நிலவுவதாகவும் அதனால், அங்கு வேட்பாளர் மாற்றப்படலாம் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், முருகன் மாற்றப்பட்டு மயில்வேல் என்பவர் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.