தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 2:38 PM IST

ETV Bharat / city

'வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்' - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுப் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, "தெலங்கானா, ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அதனால் கோயம்பேடு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சந்தைகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுப் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாளை (அக். 21) முதல் சென்னையிலும், நாளை மறுநாள் (அக். 22) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:'2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேலும் பலர் சிக்குவர்' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details