மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா (33), அயம்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27) ஆகியோர் புளியந்தோப்பில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தனர்.இருவரும் சேர்ந்து கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் பல மாதங்களாக பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
25 லட்சம் மோசடி: ஒருவர் கைது
சென்னை: தனியார் கட்டுமான நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, அந்நிறுவன பங்குதாரரான பவார்லால் ஜெயின் (53) என்பவர் கொடுக்கல், வாங்கல் கணக்குகளை சரிபார்த்துள்ளார். இதில், 25 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பவார்லால் ஜெயின் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பவார்லால் ஜெயின் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிரகாஷை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும்தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணாவை தேடிவருகிறார்கள்.