தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜூன் 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுமா?

சென்னை: ஜூன் 1 முதல் ஊரடங்கு ஒருவேளை விலக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளை இயக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

buses
buses

By

Published : May 23, 2020, 7:01 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் ஊரடங்கு விலக்கப்படுமா அல்லது சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஊரடங்கில் பலவகை பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இதுவரை போக்குவரத்து சேவை தொடங்கப்படவில்லை. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமாகிறது.

இந்நிலையில், கடந்த 57 நாட்களாக சேவையை தொடராததால் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையான நிதிச் சுமையில் சிக்கியுள்ளன. தொழில் முடக்கம் காரணமாக, பேருந்து ஒன்றுக்கு சராசரியாக 3 முதல் 3.5 லட்ச ரூபாய் வரையிலும், ஒரு உரிமையாளருக்கு 10 லட்சம் ரூபாய் வரையும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் ஜூன் 15ஆம் தேதி தான் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவதாகக்கூறும் பேருந்து உரிமையாளர்கள், அதற்கான முன்னேற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்.

பேருந்தின் பராமரிப்பு பணிகள், கிருமி நாசினி தெளித்தல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க ஸ்டிக்கர் ஒட்டுவது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

ஜூன் 1 முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுமா?

இனி வரும் நாட்களில் தகுந்த இடைவெளியுடன் பேருந்தை இயக்க வேண்டும் என்பதால், பாதி இருக்கைகளை கொண்டு பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் கட்டாயமாக இரண்டு மடங்கு வரை பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்றும், மக்களின் மீதான இந்த சுமையை அரசுதான் வரி முதலானவற்றிலிருந்து தங்களுக்கு விலக்கு அளித்து போக்க வேண்டுமெனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 2000 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

ABOUT THE AUTHOR

...view details