ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
சென்னையில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன:
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் இன்று (ஆகஸ்ட் 18) திறக்கப்படுகின்றன. ஒரு மதுபானக் கடையில் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும், வாடிக்கையாளர்கள் அனைவரும் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு: