சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உயர்த்திய புதிய சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் இணையதளம் மூலம் செலுத்தலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி/இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட, சொத்துவரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, அனுமதி பெறப்பட்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு மேற்குறிப்பிட்டவாறு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால்துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு ஜூன் 27ஆம் தேதி வரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.