தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2021, 10:04 AM IST

Updated : Jul 14, 2021, 1:00 PM IST

ETV Bharat / city

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்
நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

10:01 July 14

நீட் தேர்வு தொடர்பான ஆய்வு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இன்று தாக்கல் செய்தார்.

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

சென்னை : தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இன்று சந்தித்தார். அப்போது நீட் தேர்வு தொடர்பான 165 பக்க அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.  

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பான 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம  தாக்கல் செய்ததாக தெரிவித்தார். நீட் தேர்வின்  தாக்கம் குறித்த முக்கிய அம்சங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் விளக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

நீட் தேர்வு குறித்து அனைத்து தரப்பு மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டார்.

மொத்தம் 86,432 மனுக்கள் வந்துள்ளதாகவும்,  அதில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளதாகவும் தெரிவித்தார். குழுவின் பணிக்காலம் முடிவடைந்து உள்ளதாக தெரிவித்த அவர், அரசு அளித்த கால அவகாசம் போதுமானதாக இருந்ததாகவும் கூறினார். 

இதையும் படிங்க :நீட் தேர்வில் விடை அளிக்கும் முறையில் மாற்றம்

Last Updated : Jul 14, 2021, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details