சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தை பிறந்தது குறித்து சர்ச்சை எழுந்தது. வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றதில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும், விதிகளும் மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறையின் சார்பில் குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளும் எனவும், வாடகைத் தாய் சட்டத்தின் படி உரிய முறையில் பதிவு செய்யப்பட்டதா? எனவும் ஆய்வு செய்யவுள்ளனர்.
எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதையும், தமிழ்நாட்டில் தான் சிகிச்சைப் பெற்றாரா, அப்படி பெற்றிருந்த பட்சத்தில் தமிழ்நாட்டில் உரிய நடைமுறையை மருத்துவமனை பின்பற்றி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாடகைதாய் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவரம் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட தகவலில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் பெயர் உள்ளதா என்பது குறித்து விசாரணனை நடைபெற்று வருகிறது.
மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரணை மேற்கொள்ளவும், விசாரணை முடிந்தவுடன் இணை இயக்குநர் தலைமையிலான குழு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரிடம் சமர்ப்பிப்பார்கள், அதன் பின் அரசுக்கு அந்த அறிக்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி"