தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்' - சென்னை செய்திகள்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு உழவர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பயிர் காப்பீட்டுக்கு விண்ணபிக்க அவகாசம் கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம்
பயிர் காப்பீட்டுக்கு விண்ணபிக்க அவகாசம் கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம்

By

Published : Nov 13, 2021, 2:24 PM IST

சென்னை: ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி, பிசானம் பருவ நெற்பயிரைச் சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்டங்கள் உள்பட 26 மாவட்ட உழவர் உடனடியாக பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 10 லட்சம் உழவர், சுமார் 25 லட்சம் ஏக்கரில் பயிர் நடவுசெய்துள்ள நிலையில், 8.75 லட்சம் உழவர் தங்களின் 12 லட்சம் ஏக்கர் அளவில் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடைசி தேதி

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கு வரும் 15ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம்

வடகிழக்குப் பருவமழை காரணமாக இ-சேவை மையங்கள் செயல்படாத நிலையில் அதற்கான காலவரம்பை நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கக் கோரி, நரேந்திர சிங் தோமருக்கு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details