இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதைச் சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை 'மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கச் செய்தவர் கருணாநிதி. அதுமட்டுமின்றி, அவர்களின் நலனுக்கென தனித் துறையை உருவாக்கித் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கண்ணொளித் திட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் வரை - தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, துணையாகப் பயணிப்போருக்கும் பேருந்தில் கட்டணச் சலுகை மேற்படிப்பில் முழுக் கட்டணச் சலுகை என உரிமைகள் - சலுகைகள் வழங்கப்பட்டன. டிசம்பர் 3இல் அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருப்ப விடுப்பு வழங்கியதும் திமுக அரசு.