இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பக்கத்தில், "திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்திய இனமானப் பேராசிரியர் க.அன்பழகனின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று. இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் உறுதியாகப் பற்றி நின்று, கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதியவர்.
'இனமானப் பேராசிரியரின் நினைவு நாள்' - ஸ்டாலின் மரியாதை!
சென்னை: பேராசிரியர் க.அன்பழகனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, அவரது இல்லத்திற்குச் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக, அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக, கலைஞருக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக, இயக்கக் கருத்தியலின் தலைவராகத் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிப் பாடுபட்ட இனமானப் பேராசிரியரின் முதலாமாண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி மதநல்லிணக்க, சுயமரியாதைமிக்க சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விடியலுக்கான முழக்கம்! - திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடிதம்