தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணியின்போது கரோனா தொற்றுக்குள்ளான பணியாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

சென்னை: கரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

velumani
velumani

By

Published : May 15, 2020, 4:31 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று பாதித்தாலோ, துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டாலோ உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில், கரோனா தொற்றுக்குள்ளான சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின்போது கரோனா தொற்றுக்குள்ளான பணியாளர்கள் - 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது“ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - ஜெயக்குமார் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details