தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே.06),வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் நகர்ப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, மூங்கில் மண்டி சாலை, காந்தி சாலை ஆகியவற்றில் செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக மாற்றியமைக்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளும் மேல் நிலை மின் தட பாதைகளை புதைவடமாக மாற்றும் பணி 100% நடைபெறுகிறது. பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையார், ஐ.டி காரிடார் உள்ள 5 கோட்டங்களில் உயரழுத்த மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றியமைக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முடிவடையும்.