தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2020, 4:39 PM IST

ETV Bharat / city

பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை எப்போது? - அமைச்சர் ஆலோசனை!

சென்னை: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை துவக்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

reopen
reopen

கரோனா பரவலால் நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, இன்று(ஜூலை.20) கருத்து தெரிவிக்கும் படி மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியிருந்தது.

மேலும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகளை எப்போது தொடங்கலாம் என்று பெற்றோரிடம் கருத்தறிந்து கூறவும், பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுரை வழங்கி இருந்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறையில் சான்றிதழ் வழங்குவதா அல்லது மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் வழங்குவதா என்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை போன்றவை குறித்தும், துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து, கூட்டத்தில் விவாதித்த கருத்துகளை அவரிடம் தெரிவித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை துவக்கம், பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மீண்டும் பெரியார் சிந்தனைகளைச் சேர்க்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details