சென்னையில் கரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தண்டையார் பேட்டை மண்டலத்தில் கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு பணிக்காக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டையார் பேட்டைக்கு அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்!
சென்னை: தண்டையார் பேட்டை மண்டலத்தில் கரோனா ஒருங்கிணைப்பு பணிக்காக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மண்டலங்கள் 13, 14, 15க்கும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மண்டலங்கள் 1, 2, 3க்கும் கரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலங்கள் 8, 9, 10க்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜும், மண்டலங்கள் 3, 5க்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், மண்டலங்கள் 7, 11, 12க்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பல்வேறு மாவட்டங்களில் புதிய மேம்பாலங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு